இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் பார்மா துறையில் இறங்கியுள்ளது பிளிப்கார்ட்.
ஏற்கனவே இத்துறையில் பல முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ள நிலையில், சிறு நிறுவனங்கள் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ளக் கூட்டணி நிறுவனங்களாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான ஆன்லைன் வாடிக்கையாளர்களைக் கொண்ட பிளிப்கார்ட் களத்தில் இறங்கியுள்ளது மூலம் போட்டி கடுமையாகியுள்ளது.
இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. ரூ.5 லட்சம் கோடி செலவு!
பிளிப்கார்ட் நிறுவனம்
பிளிப்கார்ட் நிறுவனம் இன்று ஆன்லைனில் மருந்து விற்பனைக்காகப் பிரத்தியேகமாகப் பிளிப்கார்ட் ஹெல்த்+ என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் டாடாவின் 1MG, ரிலையன்ஸ் ஜியோவின் நெட்மெட்ஸ், பார்மாஈஸி, அமேசான் நிறுவனங்களுடன் போட்டிப்போட தயாராகியுள்ளது பிளிப்கார்ட்.
பிளிப்கார்ட் ஹெல்த்+
பிளிப்கார்ட் ஹெல்த்+ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் அல்லாமல் ஹெல்த்கேர் பொருட்களான ஹெல்த் டிரிங்க்ஸ், வெல்னஸ், சுகாதாரப் பொருட்களையும் ஆர்டர் செய்து பெற முடியும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு
முதற்கட்டமாகப் பிளிப்கார்ட் ஹெல்த்+ செயலி ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, அடுத்தச் சில வாரத்தில் ஆப்பிள் போன்களில் பயன்படுத்த ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்ய உள்ளதாகப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதேபோல் இணையதளம் வாயிலாகவும் மருந்து பொருட்களை வாங்க முடியும்.
20000 பின்கோடு
பிளிப்கார்ட் பிளிப்கார்ட் ஹெல்த்+ செயலியின் சேவையை இந்தியாவில் சுமார் 20000 பின்கோடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பிளிப்கார்ட் ஹெல்த்+ செயலியில் மருத்துவம் சார்ந்த அனைத்து பொருட்களும் உள்ளது, இதேபோல் மருத்துவர்களின் பல கட்டுரைகளும் உள்ளது.
Flipkart Health+ app launched to compete with PharmEasy and Tata 1mg
Flipkart Health+ app launched to compete with PharmEasy and Tata 1mg பிளிப்கார்ட்-ன் புதிய சேவை.. டாடா, ஜியோவுக்கும் நெருக்கடி.!