ரஷ்ய அதிபர் புடினின் குழந்தைகள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது, மேலும் ரஷ்ய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது.
புடின்-அவரது முன்னாள் மனைவி Lyudmila Putina ஜோடிக்கு Mariya Putina, Yekaterina Putina என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபரின் பல சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிவைக்கப்படும் புடின் மகள்கள்! கசிந்த முக்கிய தகவல்
இந்த தடைகள் மூலம், புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அமெரிக்க நிதி அமைப்பில் இருந்து நீக்கி, அவர்கள் நாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களை முடக்கப்படும்.
பொருளாதாரத் தடைகள் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி மற்றும் மகள் மீதும் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவில் புதிய முதலீடுகளை தடை செய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.