நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் கடந்த மாதம் ‘
வலிமை
‘ படம் வெளியானது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வலிமை’ படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. வலிமையை தொடர்ந்து ‘
ஏகே 61
’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைய உள்ளனர்.
இதனை தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘
ஏகே 62
’ படத்தை
விக்னேஷ் சிவன்
இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த வருட இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளனர்.
‘சூர்யா 41’ படத்துல இதெல்லாம் இருக்காது: ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய சூர்யா..!
பொதுவாகவே அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆவார். இந்நிலையில் எச். வினோத் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே ‘ஏகே 62’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது அடுத்தடுத்த பட இயக்குனர்களையும் தேர்வு செய்துவிட்டாராம் அஜித். அதன்படி சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக ‘ஏகே 63’ படத்தில் இணையவுள்ளாராம். அதனை தொடர்ந்து ’8 தோட்டாக்கள்’ இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘ஏகே 64’ படத்திலும் நடிக்கவுள்ளாராம். அஜித் தன்னுடைய கொள்கைகளை தளர்த்தி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவது ரசிகர்கள் மத்தியில் குதுகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் தன் கைப்பட எழுதிய கடிதம்! யாருக்காக தெரியுமா?