பெண்களை சமீப காலமாக தீவிரமாக பாதிக்கக் கூடிய பல நோய்களுள் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) ஒன்றாகும்.
எண்டோமெட்ரியோசிஸ் இடப்படும் கருப்பையை பாதிக்கக் கூடிய ஒரு குறைபாடாகும்.
1 ல் 10 பெண்கள் எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பாதிப்பு குறித்து பொதுவாக பெண்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு இல்லை.
அந்தவகையில் இந்தபாதிப்பு ஏன் ஏற்படுகின்றது? இதன் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
Endometriosis என்றால் என்ன?
மாதவிடாயின் போது கருப்பையின் உள்ளார்ந்த புறணி உடைந்து துண்டுகளாக இரத்தப்போக்கின் மூலம் வெளியேறுவதே எண்டோமெட்ரிம் எனப்படுகிறது. கருப்பை ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உட்பூச்சுக்கான உணர்திறனை கொண்டது.
எண்டோமெட்ரியல் திசு கர்ப்பப்பையில் இன்றி ஃபலோபியன் குழாய்களிலோ, ஓவரிகளிலோ அல்லது சில தொலைதூர உறுப்புகளிலோ வளரும் போது எண்டோமெட்ரியம் உருவாகிறது.
இது ஒரு குறிப்பிடத்தக்க வலிமிகுந்த நிலை மற்றும் இது எப்போதாவது இடுப்பு உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஓட்டும்போது ஏற்படக்கூடியது.
அறிகுறிகள் என்ன?
- பாலியல் உறவுக்கு முன்னும் பின்னும் தீவிரமான வலி
- அடிவயிறு மற்றும் கீழ் முதுகு வலி
- மாதவிடாய் காலத்தில் தீவிரமான பாதிப்புகள்
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- அதிகப்படியான ரத்தப்போக்கு
- மனச்சோர்வு, மன நிலையில் மாற்றங்கள்
- அதீத சோர்வு
பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- பெரும்பாலான பெண்கள் தங்களின் உணவுப் பழக்கங்களை மாற்றினாலே இந்த பாதிப்பை குறைக்கலாம்.
- காய்கறி, தானியங்கள், சிறு தானியங்கள் பயிறு வகைகள், விதைகள், முட்டை மற்றும் மீன் ஆகிய உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.
- பிராசஸ் செய்யப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி, அதிகமான இனிப்பு, மற்றும் அதிகமான கொழுப்பு உள்ள உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு பாக்கெட்டில் வரும் உணவுகள் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.