லிமா:பெட்ரோல், டீசல் மற்றும் உரம் ஆகியவற்றின் விலையை குறைக்கக் கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பெரு நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெருவில் பெட்ரோல், டீசல், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தலைநகர் லிமாவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இதனால் அங்கு நேற்று அதிகாலை 2:00 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் நடத்திய பொதுமக்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது போராட்டம் நாடு முழுதும் பரவி வருகிறது.
லிமா:பெட்ரோல், டீசல் மற்றும் உரம் ஆகியவற்றின் விலையை குறைக்கக் கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பெரு நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.