பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கைக்கு 36 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் இலங்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் நிலையில், இந்தியாவின் உதவி சற்று ஆறுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.