லட்சுமி நரசிம்மர் கோவிலில் | Dinamalar

தங்கவயல் : ‘கோவிந்தா’ கோஷத்துடன் பிரசன்ன நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.தங்கவயல், கோரமண்டல், சுவாமிநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாமி பிரதிஷ்டாபனம் மற்றும் மஹா கும்பாபிஷேகம், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சுவாமி விக்கிரக பிரதிஷ்டாபனையும், மஹா கும்பாபிஷேகமும் கடந்த 4 முதல், நேற்று வரை நடைபெற்றன.நேற்று காலை 7:30 மணிக்கு சுப்ரபாத சேவை, வேத பாராயணம், பிரதான ஹோமத்திற்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதற்கு முன், 108 கலசங்களை தலையில் சுமந்த படி அர்ச்சகர்கள், மங்கள வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்தனர். காலை 10:30 மணிக்கு, ‘கோவிந்தா’ கோஷம் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடந்தது.பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தலைவர் மகேந்திரன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.கும்பாபிஷேக பூஜைகளை கிருஷ்ணகிரி பரந்தாமன் சுவாமி, திருப்பதி ரகுபட்டர், கோவில் அர்ச்சகர் ராமானுஜம், சிவநாராயணன், குசேலன், இளங்கோ சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் ஏராளமான வைணவர்கள் பங்கேற்றனர். ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தின் சுபானந்த தாசர் குழுவினரின் ஹரி நாம சங்கீர்த்தனம், மணவாள மாமுனிகள் சபையின் பஜனை, சிவநாராயண அர்ச்சகரின் ஹரிகதை நிகழ்ச்சியும் நடந்தது.இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜையும் நடக்கிறது. தினமும் வேத பாராயணம் ஓதுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.