விஜய் சேகர் ஷர்மாவின் கருத்து எடுபடுமா.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் அதிகரிக்குமா?

பேடிஎம் பங்கு, முதலீட்டாளர்களின் பணத்தில் பெரும்பகுதியை அழித்த பங்குகளில் ஒன்று. இந்த பங்கினில் போட்ட பணமாவது மிஞ்சுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா, அதன் முதலீட்டாளார்களுக்கு பேடிஎம் நிறுவனத்தினை, வெற்றிகரமான மற்றும் லாபகரமான நிறுவனத்தை உருவாக்குவேன் என உறுதியளித்துள்ளார்.

பேடிஎம் கேஷ்பேக்கினால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.. சேவையால் அல்ல.. ஆதித்யா பூரி நறுக் கேள்வி!

காத்திருக்கலாம்

காத்திருக்கலாம்

எனினும் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம். இந்த நிறுவனத்தின் வணிக அடிப்படைகள் என்பது மேம்படும் வரை காத்திருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். ஒரு சிலர் நான்காவது காலாண்டில் அதன் வளர்ச்சி விகிதம் எப்படி வருகின்றது என பார்த்த பிறகு தீர்மானிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

கடன் வளர்ச்சி

கடன் வளர்ச்சி

பேடிஎம் தளத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதமானது, 4வது காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 374% அதிகரித்து 6.7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் வழங்கப்பட்ட கடன் மதிப்பானது கடந்த ஆண்டினை காட்டிலும் 417% அதிகரித்து, 3553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சராசரி பரிவர்த்தனை
 

சராசரி பரிவர்த்தனை

மார்ச் காலாண்டில் பேடிஎம் சூப்பர் ஆப்பின் சராசரி மாதாந்திர பரிவர்த்தனை பயனர்கள் எண்ணிக்கை 41% அதிகரித்து, 70.9 மில்லியனாக உள்ளனர். இதே வணிகர்களின் பரிவர்த்தனை மதிப்பு 104% அதிகரித்து, 2.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் 4வது காலாண்டு அறிவிப்பு சற்று சாதகமாக வரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

வளர்ச்சி திட்டங்கள்

வளர்ச்சி திட்டங்கள்

ஷர்மா பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், அடுத்த ஆறு காலாண்டுகளில், எபிடா விகிதம் அதிகரிக்கலாம். இது பெரும்பாலான மதிப்பீட்டாளார்களின் கணிப்பினை விடவும் முன்னதாக இருக்கும். எங்களின் வளர்ச்சி திட்டங்களில் நாங்கள் எதையும் சமரசம் செய்ய போவதில்லை. ஆக நாங்கள் வளர்ச்சி விகிதத்தினை விரைவில் எட்டுவோம் என நம்பிக்கையாக கூறியுள்ளார்.

 70% வீழ்ச்சி

70% வீழ்ச்சி

தொடர்ந்து பங்கு வெளியீட்டில் இருந்து சரிவினைக் கண்டு வந்த பேடிஎம் பங்கின் விலையானது, தற்போதைய விலையில் இருந்து பார்க்கும்போது சுமார் 70% சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் வெளியீட்டு விலையானது 2150 ரூபாயாகும்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

இன்று என்.எஸ்.இ-யில் பேடிஎம்- பங்கின் விலையானது 4.62% அதிகரித்து, 637.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 648.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 594.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 521 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது 4.57% அதிகரித்து, 637.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 648.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 594.95 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 520 ரூபாயாகும்.

கணிப்பு என்ன?

கணிப்பு என்ன?

இது குறித்து ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்டின் ஆராய்ச்சி தலைவர் சந்தோஷ் மீனா, முதலீட்டாளார்களுடன் தனது ஆலோசனையை பகிர்ந்து கொள்ளும்போது, அதன் பிராண்ட் மதிப்பு காரணமாக கவர்ச்சிகரமாக காண்கிறார்கள். ஆனால் நிறுவனம் அதன் லாபம் குறித்து நிச்சமற்ற நிலையில் உள்ளது. எனினும் வரவிருக்கும் நாட்களில் 770 – 870 ரூபாய் என்ற லெவலில் எதிர்பார்க்கிறோம். எனினும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

காத்திருங்கள்

காத்திருங்கள்

இதே ரிலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் விபி அஜித் மிஸ்ர, தற்போதைய ஏற்றம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதிலாக முதலீடுகள் வெளியேற காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆக புதிய முதலீட்டாளர்கள் அடிப்படை மேம்படும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

vijay shekhar sharma expects EBITDA to breakeven soon

vijay shekhar sharma expects EBITDA to breakeven soon/விஜய் சேகர் ஷர்மாவின் கருத்து எடுபடுமா.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் அதிகரிக்குமா?

Story first published: Wednesday, April 6, 2022, 19:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.