நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்துள்ளது. இது மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அ
அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.