கொலம்பியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த வாழைப்பழங்கள் அடங்கிய பார்சல்களைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ஆம், அந்த பார்சல்களுக்குள், வாழைப்பங்களுக்கு இடையே எக்கச்சக்கமான போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையும், தேசிய குற்றவியல் ஏஜன்சியும் இணைந்து மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கிய, சுமார் 3.7 டன் எடை இருந்த அந்த போதைப்பொருளின் மதிப்பு, 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
இது குறித்து பேசிய பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், 2015க்குப் பிறகு மிக அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இப்போதுதான் என்றார்.