வேலை செய்ய எது சிறந்த நிறுவனம்.. பட்டியல் போட்ட லிங்க்ட்இன்.. பட்டியலில் யாரெல்லாம்?

திறமையுள்ள இளைஞர்களை பணியமர்த்துவது, பெண்களுக்கு வாய்ப்பு, ஊழியர்கள் தக்கவைப்பு உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்திய நிறுவனங்கள் தான், இன்று பணிபுரிய சிறந்த நிறுவனங்களாக மாறியுள்ளன.

லிங்க்ட்இனின் 2022ல் இந்தியாவிற்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியலில், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், அக்சென்ச்சர், காக்னிசண்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த- பட்டியல் ஏழு அம்சங்களை கணக்கில் வைத்து தொகுக்கப்பட்டுள்ளது.

போர்ப்ஸ் பட்டியலில் 10வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி.. அப்போ கௌதம் அதானி..?!

எதில் கவனம்

எதில் கவனம்

முன்னேறும் திறன், திறன் வளர்ச்சி, நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை, வெளிப்புற வாய்ப்பு, நிறுவன உறவு, பாலின வேறுபாடு மற்றும் கல்வி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த சிறந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரெஷ்ஷர்கள் மீது கவனம்

பிரெஷ்ஷர்கள் மீது கவனம்

விப்ரோ, ஐபிஎம், ஹெச்.சிஎல் போன்ற நிறுவனங்கள் அதிக பிரெஷ்ஷர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதில் விப்ரோ 2023ம் நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதே 2022ம் நிதியாண்டில் 17,500 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது என லிங்க்ட் இன் தெரிவித்துள்ளது.

ஹெச்சிஎல்
 

ஹெச்சிஎல்

ஹெச்சிஎல் நிறுவனத்தின் பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல் கடந்த 2022ம் நிதியாண்டில் 22,000 பேராக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 40,000- 45,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதே ஐபிஎம் மற்றும் டெலாய்ட் நிறுவனங்களும் அதன் பணியமர்த்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. மேலும் இது மெட்ரோ அல்லாத நகரங்களிலும் பணியமர்த்தப்படுவதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.

காக்னிசண்ட்

காக்னிசண்ட்

காக்னிசண்ட் 2022ம் ஆண்டில் 50,000 பிரெஷ்ஷர்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனம் 2022ம் நிதியாண்டில் 55,000 கல்லூரி பட்டதாரிகளைக் கொண்டுள்ளது. 2023ல் இன்னும் அதிகமானவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அசென்ச்சர் நிறுவனமும் ஜெய்ப்பூர் மற்றும் கோயமுத்தூரில் அலுவலகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

பெண்களின் பங்கு

பெண்களின் பங்கு

டிசிஎஸ், அசென்ச்சர் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்தம் 5 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். அதில் 2 லட்சம் பெண்கள் உள்ளனர். விப்ரோ நிறுவனமும் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடர விரும்பும் பெண்களுக்கும், வேலைக்கு திரும்புதல் திட்டத்தினை தொடங்கியுள்ளது. இதே அக்சென்ச்சரில் பெண் பணியாளர்களில் 45% பேர் பெண்கள் ஆவர்.

தக்கவைப்பு நடவடிக்கை

தக்கவைப்பு நடவடிக்கை

இன்ஃபோசிஸ் மற்றும் காக்னிசண்ட் போன்ற நிறுவனங்கள் பணியமர்த்துவது மட்டும் அல்ல, அதனை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. காக்னிசண்ட் நிறுவனத்தின் அதிக போனஸ் மற்றும் பதவி உயர்வுகளையும் வழங்குகிறது. ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக பணியாளர் பயிற்சியிலும் முதலீடு செய்கிறது. இதே சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம் தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது.

என்னென்ன நிறுவனங்கள்?

என்னென்ன நிறுவனங்கள்?

டிசிஎஸ், காக்னிசண்ட், இன்ஃபோசிஸ், ஐபிஎம், அமேசான், டெலாய்ட், கேப்ஜெமினி, ஹெச்.சி.எல், ஆரக்கிள், டெல் டெக்னாலஜி, பாஸ்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டூப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பிளிப்கார்ட், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, இஓய், ஆதித்யா பிர்லா குரூப், ஆர்ம், ஹால், ஜேபி மார்கன், Publics Groupe உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS, accenture, cognizant, infosys among the top 25 workplaces: linkedin

TCS, accenture, cognizant, infosys among the top 25 workplaces: linkedin/வேலை செய்ய எது சிறந்த நிறுவனம்.. பட்டியல் போட்ட லிங்க்ட்இன்.. பட்டியலில் யாரெல்லாம்?

Story first published: Wednesday, April 6, 2022, 16:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.