ஹாசன் : வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெண்கள் உட்பட 55 கூலி தொழிலாளர்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர்.ஹாசன் அன்னேஹள்ளியில் கூலி தொழிலாளர்கள் சட்ட விரோதமாக கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, இரு கொட்டகையை திறந்த போது, 10 பெண்களும், 45 ஆண்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இவர்கள் அனைவரும் இஞ்சி பயிரிடும் பணிக்காக, சிக்கமகளூரு, தாவணகரே, ஹுப்பள்ளி, மதுகிரி, பாவகடா, மாண்டியா, தமிழகம் உட்பட பல பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டது தெரியவந்தது.ஆனால், இங்கு வந்த பின், அவர்களுக்கு இஞ்சி பயிரிடும் பணி கொடுக்காமல், வேறு பணிகள் கொடுத்துள்ளனர். மேலும், பல நாட்கள் தங்கள் குளிக்க கூட அனுமதிக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, ஒரு சிறிய கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இது குறித்து போலீஸ் அதிகாரி ஆனந்தி கூறுகையில், ”இஞ்சி பயிரிடும் பணிக்காக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். சரியான ஊதியமும், தங்கும் வசதியும் செய்து தரவில்லை. அவர்களை மீட்டு சமூக நலத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்,” என்றார்.
Advertisement