1000 தடுப்பணைகள்… ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம்… இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்

Tamilnadu Assembly Highlights : தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாள் வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த இரு பட்ஜெட் மீதாக விவாதம் கடந்த 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் தங்களது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சட்டசபையின் பல்வேறு மானிய கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் இன்று காலை கூடியது. இதில் மானிய கோரிக்கையின் முதல் நாளாக இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையின் மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார்

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1000 தடுப்பனைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பணைகள் கட்டுவதில் திமுக முனைப்பு காட்டி வருவதாக கூறியுள்ள அவர், அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பனை கட்ட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகளாக அதிமுக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் இந்த வரி உயர்வுக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார் அமைக்கர்கள் பதில் அளித்தனர். இதில், ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொழிற்பூங்கா நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விவசாயிகள் பாதிக்கபாதபடி நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கபப்டும் என்று கூறியுள்ளார். மேலும் சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது வேளான் துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளான்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுக்காவாக விரைவில் செயல்படும் என்றும், மக்களுக்கு 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.  

தொடர்ந்து சட்டப்பேரவையில், பவானிசாகர் குடியிருப்புகள் குறித்து உறுப்பினர் பண்ணாரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பவானிசார் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அரசிடம் இல்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் மக்களின் எதிர்பார்ப்பை ஆய்வு செய்து நிலங்கள் கிடைப்பதை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 216 துணைமின்நிலையங்கள் அமைக்கப்படும். இதில் 193 துணை மின் நிலையங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 துணைமின் நிலையங்களுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.  மேலும் சென்னையின் அனைத்து பகுதிகளிலும், மின் புதைவிட கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து சட்டசபையில் உறுப்பினர் கண்ணன் முந்திரி பதப்படுத்துதல் ஆலை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தொழில் முணைவோர் முன்வந்தால் முந்திரி பதப்படுத்தும் ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன்பெற அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.