இந்திய பங்கு சந்தையானது சமீபத்திய நாட்களாக மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பல முன்னணி நிறுவன பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.
இந்த ஏற்றம் சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய சரியான நேரமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கொரோனா பெருந்தொற்று முடிந்து தற்போது இயல்பு நிலையானது திரும்பிக் கொண்டுள்ளது.
எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயானது பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கிடையில் பணவீக்கம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது சரியான தருணமா? வாருங்கள் பார்க்கலாம்.
மங்களூர் கெமிக்கல்
மங்களூர் கெமிக்கல் நிறுவன பங்கின் விலையானது டெக்னிக்கலாக ஏற்றம் காணும் விதமாக காணப்படுகின்றது. ஆக முதலீட்டாளர்கள் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது. இந்த பங்கின் விலையானது 3 மாதத்தில் நல்ல ஏற்றம் காணலாம். இதன் ஸ்டாப் லாஸ் 81 ரூபாயாக வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மங்களூர் கெமிக்கல் உற்பத்தி
மங்களூர் கெமிக்கல் கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு உர நிறுவனமாகும். இது யுபி குழுமத்தினை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது பன்முக வணிகம் செய்யும் ஒரு நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனம் யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட், மியூரேட் ஆஃப் பொட்டாஷ் என பல வகையான உரங்களை உற்பத்தி செய்து வருகின்றது.இதனை தென்னிந்தியா முழுவதும் அனுப்பி மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துகிறது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
இந்த உர பங்கானது Descending triangle பேட்டர்னினை உடைத்துள்ளது. மேலும் வாம்யூமும் இந்த சமயத்தில் அதிகரித்துள்ளது. இதன் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலான 86.60 ரூபாயை உடைத்துள்ளது. வார கேண்டிலில் MACD மற்றும் RSI இண்டிகேட்டர்களும் ஏற்றம் கானும் விதமாகவே காட்டுகின்றன.
ஹெச்எஸ்ஐஎல் (HSIL)
கட்டிட அலங்கார பொருட்கள் உற்பத்தி நிறுவனமாகும். இது கண்டெய்னர் கிளாஸில் ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றது. இதன் இலக்கு விலையை தரகு நிறுவனம் 380 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் தற்போதைய விலை 310 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் 280 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 22% மேலாக ஏற்ற காணலாம் என நிறுவனம் கணித்துள்ளது. இந்த பங்கின் விலையும் டெக்னிக்கலாக ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. மூவிங் ஆவரேஜ், ஆர்எஸ்ஐ, ஏடிஎக்ஸ்,MF, உள்ளிட்ட குறியீடுகள் சாதகமாக உள்ளன.
buy 2 these stocks and get gains in 3 months : HDFC securities
buy 2 these stocks and get gains in 3 months : HDFC securities/3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!