பெங்களூரு:கர்நாடகாவில் உள்ள பி.யு., கல்லுாரிகளில் அதிக வேலை இல்லாத 44 பேராசிரியர்களை இடம் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் உள்ள பி.யு., கல்லுாரிகளில் பணியாற்றும் அதிக வேலை இல்லாத 44 பேராசிரியர்களை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங் நாளை மறுதினம் நடக்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு சுற்றோலை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பேராசிரியர்களின் பெயர், விபரம் வெளியிடப்பட்டுள்ளது.கல்வித்துறையின் இ.எம்.ஐ.எஸ்., தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு இடம் மாற்றம் செய்யப்படுவர்.இதற்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க இன்று கடைசி நாள்.
இடம் மாற்றம் மற்றும் கூடுதல் பேராசிரியர்கள் தேவைப்படும் கல்லுாரிகள் குறித்த பட்டியல் நாளை வெளியிடப்படும்.அரசு பி.யு., கல்லுாரிகளில் கலை, வணிகம் மற்றும் மொழி பாடம் தொடர்பான பேராசிரியர்கள் வாரம் 20 மணி நேரம் வகுப்புகள் நடத்த வேண்டும்.கவுன்சிலிங்கில் முடிந்த வரை பேராசிரியர்கள் தற்போது பணியாற்றும் கல்லுாரி இருக்கும் மண்டலத்துக்குள்ளேயே மாற்றப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement