50 ஆண்டுகளாக போலீஸூக்கு தண்ணிகாட்டிய முதியவர் – சிக்கியது எப்படி?

இங்கிலாந்தை பொறுத்தவரை டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது கடும் தண்டனைக்குரியதாக கருதப்படுகிறது. அவ்வாறு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகளவில் விதிக்கபடும். இந்நிலையில், 70 வயதாகும் முதியவர் ஒருவர் இதுவரை லசென்ஸ் எடுக்காமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார். சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் ஒருமுறைகூட போலீஸிடம் சிக்கியதாக பதிவுகளும் இல்லை.  டெஸ்கோ எக்ஸ்ட்ரா ஸ்டோர் அருகே முதியவரை டிராபிக் போலீஸார் பிடித்து விசாரித்தபோது இந்த உண்மை அவர்களுக்கு தெரியவந்தது. 

மேலும் படிக்க | Aadhaar: உங்கள் ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்தினார்களா? கண்டறிய சுலப வழி

அப்போது, நடத்திய விசாரணையில் அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டி வருவதும், ஒருமுறைகூட போலீஸிடம் சிக்கியத்தில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் டிராபிக் போலீஸிடம் இருந்து தப்பியுள்ளார். இதனை டிராபிக் போலீஸாரால் நம்பமுடியவில்லை. நாட்டிங்ஹாம்ஷயர் காவல்துறையின் இது குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், நார்த் ஓபி ரீச்சர் ஸ்குவாட் ஷெர்வுட்  பகுதியில் டிராபிக் போலீஸார் வாகன ரோந்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அந்த முதியவரை மடக்கி காவல்துறையினர் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 வயதில்  இருந்து வாகனம் ஓட்டும் அவர், ஒருமுறைகூட லைசென்ஸ் எடுக்க வேண்டும் என நினைத்ததில்லை என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். 1935 ஆம் ஆண்டு முதல் சாலையில் வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என இங்கிலாந்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சோதனையின்போது லைசென்ஸ் காண்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற சட்டமும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவர் மட்டும் எப்படி? ஒருமுறைகூட போலீஸில் சிக்கவில்லை என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

இங்கிலாந்தில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறுபவர்கள் மற்றும் லைசென்ஸ் வைத்திருக்காதவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.  இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய அந்த முதியவருக்கு சாதனையாளர் விருது கொடுக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.