IPL 2022, KKR vs MI LIVE score updates in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வி கண்டது. அந்த அணியில் இளம் வீரர் இஷான் கிஷன், திலக் வர்மா பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா எப்போதும் போல் கலக்கி வருகிறார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள சூரிய குமார் யாதவ் இன்றை ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது.
சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்திய கொல்கத்தா பெங்களுருவிடம் 128 ரன்னில் சுருண்டது. எனினும், அந்த அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் தரமான வீரர்களை கொண்டுள்ளது. பந்துவீச்சில் உமேஷ் யாதவ் (8 விக்கெட்), சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, டிம் சவுதி போன்ற வீரர்கள் மிரட்டுகிறார்கள். போதாக்குறைக்கு ஆஸ்திரேலிய வேகப்புயல் பேட் கம்மின்ஸ் அணியில் இணைத்துள்ளார். பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரசல் அசுர ஃபார்மில் உள்ளார். எனவே, மும்பை அணிக்கு கொல்கத்தா கடும் சவால் விடும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில், தொடர் தோல்விகளால் துவண்டுள்ள மும்பை அணி தனது வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டும். இதனால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
Indian Premier League, 2022Maharashtra Cricket Association Stadium, Pune 06 April 2022
Kolkata Knight Riders 162/5 (16.0)
Mumbai Indians 161/4 (20.0)
Match Ended ( Day – Match 14 ) Kolkata Knight Riders beat Mumbai Indians by 5 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சிக்ஸரில் வானவேடிக்கை காட்டிய கம்மின்ஸ் 14 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் குவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி வரும் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தை பதிவு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரே ரசல் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அவர் டைமல் மில்ஸ் வீசிய 13.1 வது ஓவரில் டெவால்ட் ப்ரீவிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த நிதிஷ் ராணா 1 சிக்ஸர் விளாசி 8 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 89 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் கொல்கத்தா வெற்றிக்கு 48 பந்துகளில் 72 ரன்கள் தேவை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த சாம் பில்லிங்ஸ் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 63 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 95 ரன்கள் தேவை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 35 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் அரைசதம் 52 ரன்கள் சேர்த்தார். கடை ஓவர்களில் களத்தில் இருந்த ஆல்ரவுண்டர் வீரர் பொல்லார்ட் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 5 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
கொல்கத்தா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சர்க்கரவத்தி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
A thrilling run-chase awaits!#kkrhaitaiyaar #kkrvmi #ipl2022 pic.twitter.com/Pnwb04Wv88
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த அணி வீரர் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 35 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டி 52 ரன்கள் சேர்த்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ள சூரியகுமார் – திலக் வர்மா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ள சூரியகுமார் – இஷான் கிஷன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் கேப்டன் ரோகித் விக்கெட்டுக்கு பின்னர் களம் புகுந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 19 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்தி 29 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தற்போது மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – கேப்டன் ரோகித் ஜோடி களமிறங்கியுள்ளனர்.
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பசில் தம்பி
🗒️ How we line up for #kkrvmi:Rohit (C), Ishan (WK), Surya, Tilak, Pollard, Dewald, Sams, Ashwin, Mills, Thampi, BumrahThoughts, पलटन? 👇#onefamily िलखोलके #mumbaiindians #tataipl
— Mumbai Indians (@mipaltan) April 6, 2022
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி
Here’s how we line up against @mipaltan! 💪@winzoofficial #kkrhaitaiyaar #kkrvmi #ipl2022 pic.twitter.com/jcM9AYijC2
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2022
PAT is back!💜#kkrhaitaiyaar #kkrvmi #ipl2022 pic.twitter.com/mLRCP009GK
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2022
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
#kkr have won the toss and they will bowl first against #mumbaiindians Live – https://t.co/qFLVoCfqRk #kkrvmi #tataipl pic.twitter.com/nn7JCyXgKG
— IndianPremierLeague (@IPL) April 6, 2022
மொத்த ஆட்டங்கள் – 29
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்ற போட்டிகள் – 7
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் – 22
கொல்கத்தா – மும்பை அணிகளின் முந்தைய ஆட்டம்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசியாக நடந்த ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இன் படி, வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் மற்றும் மிகவும் சூடாக இருக்கும். மாலையில் வெப்பநிலை 26 டிகிரி மற்றும் 55 சதவீத ஈரப்பதத்துடன் இருக்கும். விளையாட்டில் பனி ஒரு முக்கிய காரணியாக இருக்கும் மற்றும் பனி சதவீதம் 20 சதவீதத்திற்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் போது மழை குறுக்கீட வாய்ப்பு இல்லை.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியமான புனே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி அமையவில்லை. இங்கு தற்போதுவரை பனி அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ப்ரீத் சிங் அல்லது சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.
Moments before the team bus is set to depart…🚍😛#onefamily #dilkholke #mumbaiindians @timdavid8 @Ramandeep__13 pic.twitter.com/G1uGu0wYDv
— Mumbai Indians (@mipaltan) April 6, 2022
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி/பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
𝙈𝙪𝙢𝙗𝙖𝙞 ➡️ 𝙋𝙪𝙣𝙚 🛣️#kkrhaitaiyaar #kkrvmi #ipl2022 pic.twitter.com/uYZm7lJftC
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2022
ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அசோக் சர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் சக்கரவர்த்தி, வருண் சக்கரவர்த்தி, அமன் கான், ஆண்ட்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்
ரோஹித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், பாசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனட்கட், ஜோப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே , ரிலே மெரிடித், டைமல் மில்ஸ், அர்ஷத் கான், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல் மற்றும் இஷான் கிஷன்
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு தொடங்கும் 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.