Tamil News Today Live: சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்: ஈ.பி.எஸ் விமர்சனம்

Tamil Nadu News Updates: பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.110.85க்கு விற்பனை. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.100.94க்கு விற்பனை.

இலங்கையில் அவசரநிலை வாபஸ் – கோட்டாபய ராஜபக்சே

இலங்கையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த அவசரநிலை வாபஸ் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம். கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றதால் மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்துள்ளது

மானியக் கோரிக்கைகள் மீது இன்று முதல் விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு மே 10 ஆம் தேதி முதல் 22 நாள்கள் நடைபெறவுள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை

ஐபிஎல் அப்டேட்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி. தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Live Updates
12:31 (IST) 6 Apr 2022
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் ரூ.32 மத்திய அரசுக்கு செல்கிறது-அமைச்சர்

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விற்பனை விலையில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.32 செல்வதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

12:24 (IST) 6 Apr 2022
சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்: ஈ.பி.எஸ் விமர்சனம்

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். சொத்துவரியை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிடவில்லை. மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என ஈபிஎஸ் விமர்சனம் செய்தார்.

12:22 (IST) 6 Apr 2022
ஏழைகளை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு-முதல்வர் அறிவிப்பு

ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது. கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .

12:16 (IST) 6 Apr 2022
பூஜையுடன் தொடங்கியது நடிகர் விஜயின் 66ஆவது பட ஷூட்டிங்

நடிகர் விஜயின் 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

11:59 (IST) 6 Apr 2022
சத்தியமங்கலம்:இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கனரக வாகனங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

11:49 (IST) 6 Apr 2022
12,100 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய்க்கு அரசு முறை பயணம் துபாய், அபுதாபி பயணத்தில் 14 ஒப்பந்தங்கள் மூலம் ₨6,100 கோடி முதலீடு ஈர்ப்பு; 12,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

11:33 (IST) 6 Apr 2022
25 மாவட்டங்களில் புதிய முதலீடுகள்-முதல்வர் அறிவிப்பு

25 மாவட்டங்களில் புதிய முதலீடுகள் செய்யப்படும் என்று சட்டப்பேரபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

11:29 (IST) 6 Apr 2022
சோளிங்கரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்-வேளாண் அமைச்சர்

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் கிராமத்தில் ₹94 லட்சம் மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் முனிரத்தினம் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

11:16 (IST) 6 Apr 2022
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெற்று வருகிறது-பிரதமர் மோடி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெற்று வருகிறது. பாஜக 42வது நிறுவன நாளையொட்டி, தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேசும்போது இதனை தெரிவித்தார்.

11:12 (IST) 6 Apr 2022
ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்

ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

10:47 (IST) 6 Apr 2022
டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே இடைத்தரகர் சுரேஷ் சந்திரசேகர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று டிடிவிக்கு சம்மன்

10:36 (IST) 6 Apr 2022
வேளாண்துறையில் காலி பணியிடங்களை நிரப்பப்படும் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

10:18 (IST) 6 Apr 2022
ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி – வி.எச்.பி. பிரமுகர் கைது!

சென்னையில் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ரூ1 கோடி மோசடியில் ஈடுபட்ட விஎச்பி பிரமுகர் தணிகைவேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

09:44 (IST) 6 Apr 2022
தூத்துக்குடி அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு பைபர் படகில் கடத்த முயன்ற ரூ10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி முள்வேலி கடற்கரை பகுதியில் 12 கிலோ ஆயில் சிக்கிய நிலையில் படகை இயக்கியவர் தப்பியோட்டம்

09:21 (IST) 6 Apr 2022
12 நாள்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம்

மூலப்பொருள்களின் தொடர் விலையேற்றம் காரணமாக கோவில்பட்டியில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தி வைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு விற்கப்படும் லைட்டரை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

09:17 (IST) 6 Apr 2022
விலைவாசி உயர்வு – திமுக நோட்டீஸ்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் குறித்து விவாதிக்க

மக்களவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்தார்

09:07 (IST) 6 Apr 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

08:38 (IST) 6 Apr 2022
உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு

திருக்குறளையடுத்து உலக மொழிகளில் மணிமேகலையை மொழிப்பெயர்ப்பு செய்ய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிங்களம், மலாய், பர்மீஸ் உள்பட 20 உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு பணி தொடங்கப்படவுள்ளது.

08:18 (IST) 6 Apr 2022
கோவையில் பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், காவல்துறை நடவடிக்கை.

08:07 (IST) 6 Apr 2022
சேலத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலை

சேலம், புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 அடி கொண்ட முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு. ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.