பிரபல தயாரிப்பாளரான கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், தளபதி விஜய்யும் சந்தித்து பேசிக் கொண்டார்கள்.
கையெடுத்து கும்பிட்டபடியே இருவரும் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் இரண்டு தளபதியும் சந்தித்த தேதியின் முக்கியத்துவம் பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது.
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்றார்
விஜய்
. வீட்டில் வரிசையாக கார்கள் நிற்க அவர் சைக்கிளில் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தான் அவர் சைக்கிளில் சென்றதாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த சைக்கிள் சம்பவம் நடந்த அதே நாளில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் விஜய்.
இந்த சந்திப்பு ஏதேச்சையாக நடந்தபோதிலும், சைக்கிள் சம்பவ தினத்தன்றே நடத்திருக்கிறதே என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
நேற்று தளபதி, தளபதி சந்திப்பு மட்டும் அல்ல
தளபதி 66
படத்தின் பூஜையும் நடந்தது. வம்சி பைடிபல்லி இயக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
Vijay:பல வருஷ ஆசை: விஜய்யை பார்த்ததும் வேலையை காட்டிய ரஷ்மிகா
விஜய்யை பார்த்த ரஷ்மிகா அவருக்கு திருஷ்டி எடுத்தது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது.