அமெரிக்கா தன் நாட்டுக்குள் வருபவர்களை பல கட்ட ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கும். இத்தனை தடைகளைக் கடந்து அங்கு செல்பவர்களுக்கு சுய-உள்நுழைவு தானியங்கி முறையில் கேள்விகள் கேட்கப்பட்டு அனுமதிக்கப்படுவர். பாதுகாப்புக்கு பெரும்பாலும் எல்லோரின் தரவுகளையும் சேகரிக்கும் தானியங்கி உள்நுழைவு கருவிகள், அமெரிக்கவின் விமானத்தளங்களில் பொருத்தப்பட்டிருக்கும். அப்படியான சுய உள் நுழைவுக் கருவி ஒன்றில் கேட்கப்படும் கேள்வி சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அந்தக் கேள்வி இதுதான். “Are You A Terrorist” என்று கணினி திரையில் தெரியும் கேள்விக்கு நீங்கள் ஆம்/இல்லை என்கிற பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இதனை புகைப்படம் எடுத்த சுயாதீன பத்திரிகையாளர் அசாத் சாம் ஹன்னா, “US விமான தளங்களில் இருக்கும் அதிநவீன பாதுகாப்பு சோதனை” என கேப்ஷன் உடன் பதிவு செய்ய நெட்டிசன்கள் அடித்து விளையாடுகிறார்கள்.
‘நீங்க ஒரு ரோபோட்டா’ என கேட்பது போல இருக்கிறது இந்தக் கேள்வி. அந்தப் பதிவிற்கு வந்த கமென்டில் சிலர், “இது எப்படி பாதுகாப்புக்கு உதவும்” என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார்கள். இன்னொரு பதிவர், 9/11 தாக்குதலுக்கு பிறகு நமது விமான நிலையங்களில் தானியங்கி கருவிகளே மிகுந்து இருக்கின்றன. மனிதர்கள் சோதனை செய்வது குறைந்திருக்கிறது. மோசமான பாதுகாப்பு முறை இது” எனப் பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு பதிவர் மூன்றாவதாக ஒரு ஆப்ஷன் சேர்த்திருக்கலாம், ஆம், இல்லை, குழப்பமானது என பதில் அளித்திருக்கிறார். இது குறித்த உங்களின் கருத்தை கமென்டில் சொல்லுங்க!