மெட்ராஸ் கஃபே இந்தி படம் மூலம் நடிகையானவர்
ராஷி கன்னா
. நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின்
சர்தார்
ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் தென்னிந்திய படங்களை பற்றி ராஷி கன்னா தவறாக பேசியதாக பேச்சு கிளம்பியது.
இது குறித்து அறிந்த ராஷி கன்னா சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,
தென்னிந்திய படங்கள் பற்றி நான் தவறாக பேசியதாக சில பொய்யான தகவல் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதை யார் செய்தாலும், தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் நடிக்கும் அனைத்து மொழி மற்றும் படங்கள் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன். அன்பாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
ராஷி கன்னாவின் வளர்ச்சியை பிடிக்காத யாரோ தான் கிளப்பிவிட்டிருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நீங்க கவலைப்படாதீர்கள் ராஷி, நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
நான் அவர் மனைவியுடன் உறவு கொண்டதை பார்த்து ரசித்தார் தொழில் அதிபர்…