மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், இந்த சட்டத்தின் மூலம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.