புதுச்சேரி : ஆச்சாரியா கல்விக் குழுமம் சார்பில், ‘நீட்’ நுழைவுத் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, வரும் ஜூன் 1ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து ஆச்சாரியா கல்விக் குழுமத் தலைவர் அரவிந்தன் கூறியதாவது:புதுச்சேரியில் சிறந்த கல்வி நிறுவனமான ஆச்சாரியா மற்றும் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் வெற்றி கோச்சிங் சென்டர் இணைந்து, ‘நீட்’ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு, வரும் ஜூன் 1ம் தேதி முதல், புதுச்சேரி, தேங்காய்திட்டு, ஆச்சாரியா பாலசிக் ஷா மந்திர் மையத்தில் நடைபெறும்.பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், வரும் 10 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ள தகுதி தேர்வு எழுதிட வேண்டும். இதில் முதல் 20 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினசரி 2 யூனிட் டெஸ்ட் மற்றும் வகுப்பு நடைபெறும். வார இறுதியில் ‘நீட்’ மாடல் தேர்வு நடைபெறும்.பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அதில் சி.பி.எஸ்.இ., மற்றும் சமச்சீர் பாடங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும், வெற்றி கோச்சிங் சென்டரின் இணையதளத்தில் 200 வீடியோ வகுப்புகள் மற்றும் 200 ஆன்லைன் யூனிட் டெஸ்ட் கொடுக்கப்படும்.ஒவ்வொரு யூனிட்டிலும் இரண்டு டெஸ்ட் கொடுக்கப் பட்டிருக்கும். தேர்வு எழுதிய உடன் மதிப்பெண் திரையில் தோன்றும். ஒவ்வொரு வினாவுக்கும் மாணவர் அளித்த பதில், சரியா, தவறா என்பதை அறியும் வசதி உள்ளது. இந்த வசதி, எந்த முன்னணி ஆன்லைன் பயிற்சி வகுப்பிலும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆச்சாரியா மற்றும் வெற்றி கோச்சிங் சென்டரின் கோடைக்கால சிறப்பு ‘நீட்’ பயிற்சி வகுப்பில் சேர்த்து, டாக்டராக்கிட அழைக்கிறோம்.இவ்வாறு அரவிந்தன் கூறினார்.
Advertisement