வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-இந்தியாவில் தீவிரமான வறுமை நிலை பெரும்பாலும் ஒழிந்து விட்டதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுனர்கள் சுர்ஜித் பல்லா, அரவிந்த் விர்மானி, கரன் பாசின் ஆகியோரின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம்: கடந்த 2019ல் கொரோனா தாக்கத்திற்கு முன், இந்திய மக்கள் தொகையில், வாங்கும் சக்தி குறைவாக உள்ளோரின் எண்ணிக்கை, 0.8 சதவீதமாக இருந்தது. இவர்கள் தீவிர வறுமையில் உள்ளவர்களாக வகைபடுத்தப்பட்டவர்கள். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020லும் தீவிர வறுமையில் உள்ளோர் இதே அளவில் தான் இருந்தனர். அவர்களின் விகிதாச்சாரம் உயரவில்லை.
இதற்கு, மத்திய அரசு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கியது தான் காரணம். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இலவச உணவுப் பொருட்கள் வினியோகம் தடுத்துள்ளது.இந்தியாவில் தீவிரமான வறுமை நிலை பெரும்பாலும் ஒழிந்து விட்டது. மக்களின் நுகர்வில் சமத்துவமற்ற நிலை, 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து உள்ளது.
மத்திய அரசின் மானியம், குறிப்பாக இலவச உணவுப் பொருட்களால் இது சாத்தியமாகிஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு கொரோனா காலத்தில் அமல்படுத்திய இலவச உணவுப் பொருட்கள் திட்டம், வரும் செப்., வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement