மும்பை,:மிக வேகமாக பரவக் கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வைரஸ் பாதிப்பு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டறியப்பட்டது என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. நம் நாட்டில், இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக இருந்த கொரோனா பரவல், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், அதிவேகமாக பரவக்கூடிய, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ஒமைக்ரான் எக்ஸ் இ வகை, முதல் முறையாக மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டறியப்பட்டதாக மும்பை பெருநகர மாநகராட்சி கூறியிருந்தது. தென் ஆப்ரிக்காவில் இருந்து, பிப்., 10ல் மும்பை வந்த ஒரு பெண்ணுக்கு, மார்ச் 2ல் நடத்திய பரிசோதனையில், அவருக்கு ஒமைக்ரான் எக்ஸ் இ வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் ஒமைக்ரான் எக்ஸ் இ வகை தொற்று இல்லை என்றும் கூறியுள்ளது.
மும்பை,:மிக வேகமாக பரவக் கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வைரஸ் பாதிப்பு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டறியப்பட்டது என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.நம் நாட்டில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.