உக்ரைனிலிருந்து 24,000 ரஷ்யப் படைவீரர்கள் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமையான நாடு என கருதப்படும் ரஷ்யாவுக்கு உக்ரைன் சரியான எதிர்ப்பைக் கொடுத்துள்ளது.
இராணுவ வீரர்களுடன் போராட முடியாமல், கோழைத்தனமாக பெண்களிடமும் குழந்தைகளிடமும் தங்கள் வீரத்தைக் காட்டிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்.
இந்நிலையில், Kyiv மற்றும் Chernihiv நகரங்களிலிருந்து வெளியேறியுள்ள 24,000 ரஷ்யப் படைவீரர்கள் பெலாரஸுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், படை திரட்டிய பின் ரஷ்யா மீண்டும் உக்ரைனின் கிழக்குப் பகுதியை பயங்கரமாக தாக்க இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் மீண்டும் டான்பாஸ் பகுதியைத் தாக்கலாம் என்பதால் இப்போதே அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆனால், உக்ரைன் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யப் படைகள் மீண்டும் போருக்குத் தயாராக ஒரு மாதம் வரை ஆகலாம் என மேற்கத்திய நாடுகள் தரப்பில் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.