ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள நண்பர்களிடம் ரஷ்ய தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் கடனுதவி கேட்டதாக வெளிவந்த தகவல்களை அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா போர் தாக்குதலை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீதும், அந்த நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள் மீதும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகள் பொருளாதார தடைகள், சொத்துக்கள் முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் மூடப்பட்டு இருப்பதால் தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு செல்சியா கால்பந்து கிளப் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் தள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரோமன் அப்ரமோவிச் தனது ஊழியர்களுக்கான 7,50,000 டாலர்கள் ஊதியத்தை எப்போதும் வழங்க தவறாத நிலையில், தற்போது தனது சொத்துக்கள் முடங்கி இருப்பதால் அதனை சரிசெய்வதற்காக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள அவருடைய நெருங்கிய பணக்கார நண்பர்களிடம் 1 மில்லியன் டாலர் கடனுதவி கேட்டு இருப்பதாக Page Six பத்திரிக்கை தகவல் வெளியிட்டது.
இதில், பிரபல பணக்காரர்கள் ரோத்ஸ்சைல்ட் குடும்பம் மற்றும் பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் பிரட் ராட்னர் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
இத்தகைய தகவல் வெளியான உடனடியாக, சிட்டி ஏஎம் வானொலி நிலையத்தில் ரோமன் அப்ரமோவிச் செய்தி தொடர்பாளர் தோன்றி அதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தார்.
மேலும் ரோமன் அப்ரமோவிச் யாரிடமும் எத்தகைய கடனுதவியும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த கடனுதவி தொடர்பான தகவலானது, ரோமன் அப்ரமோவீச்சிற்கு விஷம் வைத்துவிட்டதாக வெளியான குற்றச்சாட்டுக்கு பிறகு வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை கட்டிய ரஷ்ய துருப்புகள்…ஒற்றை ஆளாய் தீர்த்துக்கட்டிய உக்ரைன் டாங்கி: வீடியோ ஆதாரம்!