எந்தமாதிரியான குடும்ப வாழ்க்கை வேண்டும்? – டாப்சி பதில்
தெலுங்கில் சமீபத்தில் டாப்சி நடித்த மிஷன் இம்பாசிபிள் படம் பாக்ஸ் ஆபீஸில் அமோக வெற்றி பெற்றது. டாப்சியின் அடுத்த பெரிய வெளியீடு ஹிந்தியில் உருவாகி வரும் சபாஷ் மிது. இந்த படம் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது.
எந்த மாதிரியான திருமண வாழ்க்கை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛நாடகம் இல்லாத திருமணத்தை விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். என்னுடைய தொழில் நடிப்பு மற்றும் நாடகமாக இருக்கிறது. எனவே எனது திருமணம் எளிமையாகவும், சுமுகமாகவும், குழப்பம் அற்றதாகவும், எந்த நாடகத்துக்கும் இடமில்லாமல் இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் டாப்சி.