இஸ்லாமாபாத்: அடுத்து வரும் ஏழு மாதங்களுக்கு பின்னரே பொது தேர்தல் நடத்த முடியும் என பாக்., தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே பார்லிமென்ட் கூட்டத்தை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.
இந்நிலையில் அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்து வரும் ஏழு மாத கால கட்டத்திற்குள் தேர்தல் நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவதற்கு குறைந்த பட்சம் ஏழு மாத கால அவகாசம் தேவை. அதனை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதத்தில் தான் தேர்தல் நடத்த முடியும் . எனவே அது வரையில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்து உள்ளது.
இஸ்லாமாபாத்: அடுத்து வரும் ஏழு மாதங்களுக்கு பின்னரே பொது தேர்தல் நடத்த முடியும் என பாக்., தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.nsimg3002028nsimg பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் நம்பிக்கை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.