உலக சுகாதார அமைப்பு அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்களுக்கு உலக சுகாதார தின வாழ்த்துக்கள். அனைவரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசீர்வதிக்கப்படட்டும். சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய ஆனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இன்று. அவர்களின் கடின உழைப்பே நமது கிரகத்தை பாதுகாக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித்துறை விரைவான மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பல புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. உள்ளூர் மொழிகளில் மருத்துவப் படிப்பை செயல்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் எண்ணற்ற இளைஞர்களின் விருப்பங்களுக்குச் சிறகு தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. செல்போனில் தொடர்ச்சியாக ‘ஆன்லைன் கேம்’ விளையாடியதால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த பாதிப்பு