ஐ.நா., மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க்: ஐ.நா., மனித உரிமை அமைப்பில்இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தை அடுத்து மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அமெரிக்காவின் வலியுறுத்தலை அடுத்து ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தது.

latest tamil news

பொதுக்கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்தை எதிர்த்து 24 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்ததால் ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.