டெல்லி: கடந்த 2016-21 வரையிலான கல்வி ஆண்டில் மதிய உணவு திட்டத்துக்காக ரூ.50,685.34 கோடி செலவிடப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் அளித்தார். பிரதமரின் போஷன் சக்தி நிர்மான் திட்டத்தின் கீழ் 2016-17 முதல் 2020-21 கல்வியாண்டு வரை சத்துணவு வழங்க நிதி அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.