கனடாவில் மான்களை தாக்கி அளித்து வரும் புதியவகை ஜாம்பி வைரஸ் நோய்யானது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கனடாவில் ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய பகுதிகளில் உள்ள மான்கள் கூட்டங்களை Chronic Wasting Disease (CWD) என்ற விசித்திரமான வைரஸ் தாக்கி அழித்துவருகிறது, இந்த வைரஸின் அறிகுறிகளை அடிப்படையாக கொண்டு இதனை மருத்துவ நிபுணர்கள் ஜாம்பி வைரஸ் என வகைப்படுத்தி அழைத்து வருகின்றனர்.
அதிகப்படியான உமிழ்நீர் வடிதல், செயல் ஒருங்கிணைப்பு இழத்தல், அசாதாரண நடத்தை, அதிகப்படியான சிறுநீர் கழித்தல் மற்றும் எடை இழப்பு போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த வைரஸானது அமெரிக்காவில் முதல் முறையாக 1960ம் ஆண்டு கண்டறியப்பட்டதாகவும் , கனடாவில் 1996ல் முதல் முதலில் காட்டு மான்களிடம் பரவ தொடங்கியதாகவும் VICE WORLD NEWS-ன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், Chronic Wasting Disease (CWD) வைரஸ் தாக்குதலானது கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவனில் பகுதிகளில் உள்ள மான்களை தாக்கி வருவதாக ஆல்பர்ட்டா அரசாங்கத்தின் வனவிலங்கு நோய் நிபுணர் மார்கோ பைபஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மான்களை உண்பதாலும், அல்லது சடலத்தை முறையற்ற முறையில் கையாள்வதினால் கூட தொற்று மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் இந்த நோய் மனிதர்களுக்கு வந்ததற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என CDC தெரிவித்துள்ளது.
நீங்கள் பயங்கரமான மனிதர்… பள்ளி ஆசிரியரின் சகோதரி நீதிமன்றத்தில் ஆதங்கம்!