கரூர் மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், டாஸ்மார்க் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மார்க் கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.