பெங்களூரு : கர்நாடக கல்லுாரிகளில் கன்னடம் கற்பதை கட்டாயமாக்கிய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.புதிய தேசிய கல்வி கொள்கை படி, கர்நாடகா கல்லுாரிகளில் கன்னடம் கற்பதை கட்டாயமாக்கி, 2021ல் மாநில அரசு உத்தரவிட்டது.அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமஸ்கிருத பாரதி அறக்கட்டளை மற்றும் சில மாணவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்குகள், தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான முதன்மை அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘புதிய தேசிய கல்வி கொள்கையில், கன்னடம் கற்பது கட்டாயமாக்கியது தொடர்பாக குறிப்பிடவில்லை’ என்று மத்திய அரசு, நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.இதையடுத்து, கல்லுாரிகளில் கன்னடம் கற்பது கட்டாயமாக்கிய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
பெங்களூரு : கர்நாடக கல்லுாரிகளில் கன்னடம் கற்பதை கட்டாயமாக்கிய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.புதிய தேசிய கல்வி கொள்கை படி,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.