
காதலருக்கு செல்லப்பெயர் வைத்த ஸ்ருதிஹாசன்
தெலுங்கில் பிரபாசுடன் சலார், பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். மேலும் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், அவருடன் தான் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ, போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது காதலருக்கு வைரம் என்று செல்லப்பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், வைரத்துடன் காதலரை ஒப்பிட்டு ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.