
காதலை பிரேக்-அப் செய்த அனன்யா பாண்டே
பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பூரி ஜெகநாத் இயக்கியிருக்கும் இந்தப் படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி உள்ளது. ஆகஸ்டு 25ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது இப்பட நாயகி அனன்யா பாண்டே குறித்த ஒரு பரபரப்பு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது தனது காதலரான நடிகர் இஷான் கட்டாருடன் கடந்த மூன்று வருடங்களாக டேட்டிங் செய்து வந்த அனன்யா பாண்டே, தற்போது காதலை பிரேக்கப் செய்துவிட்டராம். இருவருமே தங்களது சொந்த வழியில் செல்ல முடிவு செய்திருப்பதாகவும், அடுத்தபடியாக படங்களில் அனன்யா கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம்.