மரங்களிலும், செடிகளிலும் உயிர்கள் இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. விலங்குகளும் பரஸ்ரம், அவைகளுக்கான சொந்த மொழியில் பேசிக் கொள்கின்றன.
இந்நிலையில், இப்போது வெளிவந்துள்ள ஒரு புதிய ஆராய்ச்சியில், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், ஒரு முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது தெரிய வந்துள்ளது. காளான்கள் தங்களுக்குள் பேசும் போது 50 வார்த்தைகளை பயன்படுத்துகின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை பேராசிரியர் ஆண்ட்ரூ அடமட்ஸ்கி மேற்கொண்டுள்ளார். இந்த ஆராய்ச்சியின் போது, நான்கு வகையான பூஞ்சைகளின் மின்சார செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டது. காளான்களின் மின் தூண்டுதல்கள் மனித மொழியைப் போலவே இருப்பதும் அவற்றில் பல சொற்கள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் படிக்க | Covid 4th Wave: இந்தியாவின் கொரோனாவின் நான்காவது அலை! WHO விடுக்கும் எச்சரிக்கை
இந்த ஆய்வு ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. காளான்கள் மற்றும் மனிதர்களின் மொழி ஒன்றல்ல என்று சொல்லப்பட்டாலும், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. காளான் அகராதியில் 50 வார்த்தைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ கூறுகிறார். அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்குள் பேசுகிறார்கள். ஏனோகி (enoki), ஸ்பிலிட் கில் (enoki), கோஸ்ட் (ghost) மற்றும் கேட்டர்பில்லர் பங்கி (caterpillar fungi) ஆகிய காளான்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
காளான்கள் தங்களுக்குள் எதைப் பற்றி பேசுகின்றன என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. வானிலை மற்றும் வரவிருக்கும் ஆபத்துகள் பற்றி பரஸ்பரம் தெரிவிப்பதற்காக காளான்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. எனினும் இதற்கு அதிக ஆராய்ச்சி தேவை என்றும், மின்சார செயல்பாட்டை ஒரு மொழியாக கருதுவது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும் படிக்க | Fourth wave of Covid: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் புதிய அறிகுறிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR