புதுடில்லி : ‘நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், ‘கியூட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடப்பாண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்’ என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது போல, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலை.,களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர, ‘கியூட்’ எனப்படும் பல்கலை.,களுக்கான பொது நுழைவுத் தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இது குறித்து, அனைத்து மத்திய பல்கலை.,களின் துணை வேந்தர்களுக்கு யு.ஜி.சி., எனப்படும் பல்லை., மானிய குழுவின் செயலர் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
நடப்பாண்டு முதல், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘கியூட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.நுண்கலை, நிகழ்த்துக் கலை, விளையாட்டு, உடற்கல்வி சார்ந்த படிப்புகளுக்கு மட்டும் வேறு சில கூடுதல் அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Advertisement