குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவானது, நவீன குற்றப் பரம்பரையினரையே உருவாக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் மாதிரிகளை சேகரித்து வைக்க வழிவகை செய்யும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து, நாட்டு மக்களை திறந்தவெளி கைதிகளாக மாற்ற முயலும் குற்றவியல் அடையாள நடைமுறை சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. குடிமக்களின் உயிரியல் தகவல்களை திரட்டி பாதுகாப்பதன் மூலம் நவீன குற்றப்பரம்பரையினரை பாஜக உருவாக்க முயல்கிறது.
அரசின் இந்த செயல், எதேச்சதிகாரப் போக்கின் உச்சமாகும். எனவே, தனிமனித உரிமைகளையும், சதந்திரத்தையும் முற்றாக பறிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த மசோதாவை, ஜனநாயகத்தின் மாண்புகளை காக்க போராடம் அனைத்து அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்த்து போராடி, அதனை திரும்பப் பெற வைக்க வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM