நாட்டுக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள் தனது இடத்திற்கு செல்ல மறுக்கும் விநோதமான சம்பத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டையும் எதிர்கொள்கிறது கனடாவின் மீன் பண்ணை ஒன்று.
ஒரு பண்ணைக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள், அங்கிருந்த மீன்களை சாப்பிட்டு முடித்த பிறகும் வெளியேற மறுக்கின்றன. தொழில்துறை மீன் பண்ணையில் நுழைந்த கடல் சிங்கங்கள் கட்டுப்பாடுகள் இன்றி மீன்களை உண்டு ஏப்பம் விடுகின்றன.
மேற்கு கனடாவில், ஒரு தொழில்துறை மீன் பண்ணைக்குள் நுழைந்த டஜன் கணக்கான கடல் சிங்கங்கள், வாரக்கணக்கில் அங்கேயே தங்கிவிட்டன.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் டோஃபினோவுக்கு அருகில் அமைந்துள்ள பண்ணைக்குள் தவறி நுழைந்த இந்த கடல் சிங்கங்கள், கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் அங்கிருந்து நகர மறுக்கின்றன.
மேலும் படிக்க | கனடாவில் பரவும் ஜாம்பி நோய்…சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை
சிலி, நார்வே மற்றும் கனடாவில் செயல்படும் செர்மாக் நிறுவனத்திற்கு இந்தப் பண்ணை சொந்தமானது.
மார்ச் மாத இறுதியில், இந்த விலங்குகள், ரான்ட் பாயிண்ட் பண்ணையில் (Rant Point farm) வலை மற்றும் மின்சார வேலிகளைத் தாண்டி விட்டதாக மீன்வளர்ப்பு நிறுவனம் தெரிவித்தது.
கடல் சிங்கங்களை விரட்ட நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. கடல் சிங்கங்களை வெளியேற்ற உரத்த சப்தங்களும் எழுப்பப்பட்டன.
ஆனால் விலங்குகள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லையாம்! முதலில் ஒரு கடல் சிங்கம் எல்லையைத் தாணி உள் நுழைந்த பிறகு பல கடல் சிங்கங்கள் எல்லையை மீறி மீன் பண்ணைக்குள் நுழைந்தன.
மேலும் படிக்க | புளித்த பிரட்டினால் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இவை வெளியேறினால் தான், எஞ்சியிருக்கும் மீன்களை ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் அறுவடை செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
கடந்த காலத்தில், கடல் சிங்கங்கள் மற்றொரு மீன் பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்தன. அந்த நேரத்தில், கனடாவின் மீன்வள மற்றும் பெருங்கடல்கள் துறை (DFO), விலங்குகளை சுட நிறுவனத்திற்கு அமுமதி அளித்தது.
ஆனால் இப்போது, கடல் சிங்கங்கள் மிகவும் அருகிவிட்டதால் அவை கொல்லப்படக்கூடாது என்று அரசு தெரிவித்துவிட்டதால் கடல் சிங்கங்கள் எப்போது வெளியேற மனம் வைக்கும் என்று பண்ணைக்கு சொந்தக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | காளான்கள் தங்களுக்குள் பேசுகின்றன; ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்