டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,190,451 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 495,001,907 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 430,600,442 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,831 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
