இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய வர்த்தக முடிவில் 116.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் பல பில்லியனர்களை ஓரம்கட்டிவிட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கௌதம் அதானியின் திடீர் வளர்ச்சி பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
விளிம்பில் இருக்கும் இலங்கை.. 40000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுபோய்ச் சேர்த்த இந்தியா..!
கௌதம் அதானி
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகப் பணக்காரர்கள் 2022 பட்டியிலில் அதானி குழுமத்தின் தலைலர் 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்தில் இருந்த நிலையில், இன்று வர்த்தக முடிவில் போர்ப்ஸ் நிறுவனத்தின் ரியல் டைம் பில்லியனர் பட்டியலில் கௌதம் அதானி 116.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கூகுள், ஆரக்கிள்
இந்தத் தடலாடி வளர்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் தலைவர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், ஆரக்கிள் தலைவர் லேரி எலிசன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார் கௌதம் அதானி. கடந்த வாரம் தான் கௌதம் அதானி 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை பெற்றார். சுமார் ஒரு வாரத்தில் 16 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.
6வது இடம்
கௌதம் அதானி பல முறை டாப் 10 பட்டியலுக்குள் வந்திருந்தாலும், முதல் முறையாக 6வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். முகேஷ் அம்பானி 98.8 பில்லியன் டாலர் மதிப்புடன் தொடர்ந்து 10வது இடத்தில் உள்ளார்
பங்குகள்
கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு அதிகளவில் நிறுவன பங்குகளைச் சார்ந்து இருக்கும் காரணத்தால் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழும நிறுவன பங்குகள் உயர்ந்தது மூலம் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க்
முதல் இடத்தில் 279.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் இருக்கும் நிலையில் 2வது இடத்தில் இருக்கும் ஜெப் பெசோஸ் தொடர்ந்து எலான் மஸ்க்-ஐ விரட்டி வருகிறார். ஆனால் இருவருக்கும் கிட்டதட்ட 90 பில்லியன் டாலர் அளவிலான வித்தியாசம் இருக்கும் நிலையில் போட்டி கடுமையாக உள்ளது.
Gautam Adani is sixth richest person in the world, mukesh ambani stays at 10th place
Gautam Adani is sixth richest person in the world கௌதம் அதானி தடாலடி வளர்ச்சி.. முகேஷ் அம்பானி ஷாக்..!