சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் சேதன மற்றும் உயிரியல் உர உற்பத்தியில் தற்சமயம் கணிசமான வளர்ச்சியை காண முடிவதாக செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.
இம்முறை உற்பத்தி செய்யப்பட்ட திரவ உரத்தின் அளவு ஒரு கோடி 30 லட்சம் லீற்றர்களுக்கு அதிகமாகும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, முறையான ஒழுங்குறுத்தலுக்கு அமைய, ஒருசில உர வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்திக்கென 33 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இம்முறை சிறுபோகத்திற்குத் தேவையான சேதன, உயிரியல் உர வகைகளை கூடுதலாக உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உற்பத்தி செய்யப்பட்ட திரவ உரத்தின் அளவு ஒரு கோடி 30 லட்சம் லீற்றர்களுக்கு மேலாகும்.
விவசாய அமைச்சு அறிமுகம் செய்துள்ள முறைகளுக்கு பதிலாக சேதனப் பசளையை பயன்படுத்துவதன் மூலம் அறுவடையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.