ஆக்ரா: தனது புதிய படத்தை சிறைக் கைதிகளுடன் பார்த்தார் நடிகர் அபிஷேக் பச்சன். அபிஷேக் பச்சன், யாமி கவுதம், நிம்ரத் கவுர் நடித்துள்ள இந்தி படம் தஸ்வி. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. சிறையில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் ஜெயிலராக யாமி கவுதம் நடித்துள்ளார். இதனால் ஆக்ராவிலுள்ள சென்ட்ரல் சிறைச்சாலையில் படத்தை திரையிட சிறப்பு அனுமதி பெறப்பட்டது. கைதிகள் ஆயிரம் பேருடன் அபிஷேக் பச்சன், யாமி கவுதம் மற்றும் படக்குழுவினர் படத்தை பார்த்தனர். இது பற்றி அபிஷேக் பச்சன் கூறும்போது, ‘கைதிகளையும் சக மனிதர்களாக பார்க்கும் நிலை வரவேண்டும். அதைத்தான் தஸ்வி படமும் சொல்கிறது. அதனாலேயே சிறைச்சாலையிலிருந்து படத்தை திரையிட்டு பிறகு மக்களிடம் சேர்க்கப்போகிறோம்’ என்றார்.