சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, நேற்று பள்ளி முடிந்ததும் அவர் வேனில் ஏறவில்லை. காலையில் வந்தவர் மாலையில் எங்கே போனார் என்று வேன் டிரைவர் பள்ளிக்கு சென்று மாணவியை தேடினார்.
ஆனால், மாணவி காணவில்லை, இதையடுத்து பள்ளி முதல்வரிடம் தகவல் தெரிவித்த அவர், ‘மாணவியின் பெற்றோரிடம் மாணவியை காணவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது மாணவி தந்தையின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பில், “உங்கள் மகள் என்னிடம் பத்திரமாக உள்ளார். இன்னும் அரைமணிநேரத்தில் நான் சொல்லும் இடத்துக்கு நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், மாணவியை விட்டு விடுகிறோம்” என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் மாணவியின் தந்தை புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மாணவியின் தந்தையிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்து கடத்தல் பெண் கூறிய இஜாஸ் அகமது என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடைக்கு நேரில் சென்று கொடுத்துள்ளார்.
பின்னர், அந்த பெண்ணிடம் எனது மகள் எங்கே என்று கேட்டார். அதற்க்கு அப்பெண், உங்கள் மகளை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் விட்டதாக தெரிவித்துள்ளார்.
விரைந்து சென்று மகளை பெற்றோர் மீட்டனர். அதே சமயத்தில், இந்தக்கடத்தல் சம்மந்தமாக வட பழனி ஹார்டுவேர்ஸ் கடை அருகே வைத்து இஜாஸ் அகமதுவையும், மாணவியை கடத்தியதாக போனில் பேசிய பெண் மோசினா பர்வினை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக மாணவியை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மோசினா பர்வீன், இஜாஸ் அகமது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை எழும்பூர் 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.