ஜம்மு- காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் வராலற்றுமக்கி முகலாய சாலை மூடப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளர் ரியாஸ் அகமது சவுத்ரி கூறியதாவது:-
பனி அகற்றும் பணியை நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடித்துவிட்டோம். சாலையில் 33 கிலோமீட்டர் வரை இரண்டு பாதைகளையும் நாங்கள் சுத்தம் செய்துள்ளோம். இப்பினும், முகலாய சாலையில் 7 கிலோமீட்டர் வரை ஒற்றைப் பாதை அகற்றப்பட்டுள்ளது.
கலப்பை, பனி வெட்டும் கருவி போன்ற பல வகையான உபகரணங்கள் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே