டெல்லி: டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஆளுநர் ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.