தங்கம் யாருக்கு தான் பிடிக்காது, அமெரிக்காவைத் தொடங்கி ஜப்பான் வரையில் அனைத்து நாடுகளும் தங்களது நிதி நிலையைச் சரி செய்யவும், நாணய மதிப்பை சரி செய்யவும் தங்கத்தைத் தான் அதிகளவில் சார்ந்து உள்ளனர்.
முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க?
இதனால் தங்கத்திற்கு எப்போதும் உலகம் முழுவதும் டிமாண்ட் அதிகம், ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாகக் குறையத் துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் விலை உயர துவங்கியுள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
பணவீக்கம்
அமெரிக்க, பிரிட்டன் உட்படப் பல நாடுகளில் விலைவாசி தாறுமாறாக அதிகரித்துள்ள காரணத்தால் பணவீக்கம் 30 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல மாதங்களுக்குப் பின்பு அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டியை உயர்த்தியது.
அமெரிக்கச் சந்தை
இதனால் வெளிநாட்டுச் சந்தையில் இருந்த முதலீடுகள் அமெரிக்கச் சந்தையில் குவிந்தது, இதனால் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவுகள் அதிகரித்துத் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்தது. இதேவேளையில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் நிதி கணக்கை சரி செய்யவும், வட்டியை உயர்த்துவதற்கான திட்டம் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நாணய கொள்கை கூட்டம்
இந்த முறை நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் 50 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை சர்வதேச சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் 1915 டாலர் வரையில் சரிந்துள்ளது.
40 லட்சம் திருமணங்கள்
இதேவேளையில் கொரோனா தொற்றுக் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட திருமணங்கள் அடுத்த 3 மாதத்தில் அதிகளவில் நடக்க உள்ளது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் – ஜூலை வரையிலான மூன்று மாத காலத்தில் மட்டும் நாட்டில் சுமார் 40 லட்சம் திருமணங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் சேவை
இந்த 40 லட்சம் திருமணங்கள் காரணமாக இந்திய சந்தையில் ரீடைல் பிரிவில் தங்கத்திற்கான தேவை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் குறைந்துள்ள போதும் ஜூன் மாதத்திற்கு ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் அதிகரித்து 51,688 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
தங்கம் மீது முதலீடு
இதனால் அடுத்தச் சில மாதங்களுக்குத் தங்கம் விலை தொடர்ந்து உயரும் சூழ்நிலை நிலவும் காரணத்தால் திட்டமிட்டு சரியான நேரம் பார்த்து முதலீடு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது. திருமணத்திற்காகத் தங்கம் வாங்குவோருக்கு வேறு வழியில்லை என்றாலும் தங்க பத்திரம் போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
Gold price volatile in Indian market compare with global market, Is good time to buy gold
Gold price is volatile in Indian market compared with global market, Is good time to buy gold தங்கம் விலையில் அதீத தடுமாற்றம்.. வாங்கலாமா..? வேண்டாமா..?