புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிப்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று திமுக எம்பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.தமிழ்நாடு ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த வகுக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன என்றும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி விவரங்கள் பின்வருமாறு:* தமிழ்நாடு ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன?* தமிழ்நாடு ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அத்திட்டங்கள் எப்போது நிறைவுபெறும்?* தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?* ரயில்வே துறைக்கென ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? அவற்றுள் வடக்கு மற்றும் தெற்கு ரயில்வேக்கான ஒதுக்கீடு என்ன?* அத்துடன் இன்னும் பிற பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? இதன் விவரங்களை தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.